ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் சித்திரை திருவிழா 11ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2019 02:04
ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நாளை மறுதினம் (11ம் தேதி) காலை நடக்கிறது.பிரசித்திபெற்ற ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் சித்திரை திருவிழா, இந்த ஆண்டு வரும் 11ம் தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
பத்து நாட்கள் நடக்கும் சித்திரை விழாவில் முக்கிய நிகழ்வாக, 13ம் தேதி, தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 14 ம் தேதி சேஷ வாகனம், 15ம் தேதி அனுமந்த வாகனம், 16ம் தேதி யானை வாகனத்தில் வீதியுலா நடக்கிறது.வரும் 17 ம் தேதி காலை தேர்திருவிழாவும், 19ம் தேதி மதியம் மட்டையடி உற்சவமும், அன்று இரவு நித்திய புஷ்கரணி திருக்குளத்தில் தெப்பல் உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து 20ம் தேதி இரவு கொடியிறக்கம் நடக்கிறது. 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் ஆய்வர் சீனிவாசன், செயல் அலுவலர் மதனா மற்றும் முக்கிய பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.