பண்ருட்டி:பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில், பங்குனி மாதத்தை முன்னிட்டு வராகி அம்மனுக்கு உலக நன்மை வேண்டி வசந்த நவராத்திரி உற்சவத்தில் முளைப்பாரி உற்சவம் நடந்தது. விழாவையொட்டி மாலை 6:30 மணியளவில் பக்தர்கள் முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு வருவதல், 6:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் , இரவு 7:30 மணியளவில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வராகிஅம்மனை தரிசனம் செய்தனர்.