சேலம்: பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில், ராமநவமி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 5ம் நாளான நேற்று, ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் கையில் வில் அம்பு வைத்துக்கொண்டு ‘கோதண்டராமராக’ பக்தர்களுக்கு வரதராஜர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.