Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணியில் கிருஷ்ணர் உற்சவம் கடலாடி நல்ல காமாட்சிஅம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் உற்ஸவ விழா கடலாடி நல்ல காமாட்சிஅம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவிலில் சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோவிலில் சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2019
01:04

நாமகிரிப்பேட்டை: சீராப்பள்ளி மாரியம்மன் கோவிலில், சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நாமகிரிப்பேட்டை அடுத்த, சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் பண்டிகை கடந்த வாரம், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று இரவு, பூச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வலம் வந்தனர். பின்னர், பூச்சட்டியில் இருந்த நெருப்பை கோவில் முன் கொட்டியவுடன், பக்தர்கள் அதை திருநீறாக எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டனர். தொடர்ந்து, சாட்டையடி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறினாலும் அல்லது ஏதாவது ஒரு கோரிக்கையை மனதில் நினைத்துக்கொண்டும், பூசாரி முன் வந்து கையை தூக்கி வரிசையாக நிற்கின்றனர். சாட்டையுடன் நிற்கும் பூசாரி, அருள் வந்து பக்தர்களை அடிக்கிறார். ஒவ்வொருவராக வரும் பக்தர்கள், கையை உயர்த்தி நடனமாடிக் கொண்டே சாட்டையடி வாங்கிச் செல்கின்றனர். இந்த விநோத பழக்கம், பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: தங்கள் பிரார்த்தனை நிறைவேறினால், சாட்டையடி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மேலும், சாட்டையடி வாங்கினால் தீமை விலகி, நன்மை நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் குழந்தைகள், பெண்கள் பெரியவர்கள் என அனைவரும் வேண்டுதல் இல்லை என்றாலும் பூசாரி கையால் சாட்டையடி வாங்கிக் கொள்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர். மதியம், 100 பால்குட, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு பொங்கல் வைத்தல், அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது. நாளை சத்தாபரணம், 13ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா முடிகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ ... மேலும்
 
temple news
அரியலுார்; கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், 2,625 கிலோ அரிசியில் சாதம் சமைத்து, அன்னாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
சேலம்; பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேக வைபவம் நடைபெற்றது ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூரில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் இன்று பணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar