பதிவு செய்த நாள்
10
ஏப்
2019
02:04
உடுமலை:உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திரு விழாவிற்காக, குட்டைத்திடல் ஏலம் வரும், 12ல் நடக்கிறது.உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவங்கியுள்ளது; தேர்த்திருவிழாவிற்கான கடைகள், பொழுது போக்கு அம்சங்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கோவில் நிகழ்ச்சிகள் குட்டைத்திடலில் நடக்கும்.இத்திடல், 0.91 ஏக்கர் பரப்பளவுள்ள தாகும்; வருவாய்த்துறை கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தில், சுங்கம் வசூலித்துக்கொள்ளும் வகையில், வரும், 27ம் தேதி வரை, குட்டைத்திடலை பயன்படுத்திக்கொள்ளும் உரிமம் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏலம், வரும், 12ம் தேதி, மதியம், 12:30க்கு, உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது. குறைந்தபட்ச ஏலத்தொகையாக, 42 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏலம் கோருவதற்கு, முன் வைப்புத்தொகையாக, 10 லட்சம் ரூபாய்க்கான வங்கி டிடி வழங்க வேண்டும், ஏலத்தொகையைவிட கூடு தலாக மட்டுமே ஏலம் கோர வேண்டும், உடனடியாக பணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.