மானாமதுரை கோயிலில் சித்திரை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2019 12:04
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.மானாமதுரை ஆனந்த வல்லி அம்மன்- சோமநாதர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா வருடந்தோறும்தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழா நடைபெறும் நாட்களில் தினந்தோறும் அம்மனும், சுவாமியும் சிம்மம்,காமதேனு, குதிரை, அன்னம், மயில், சப்பரம், பூப்பல்லக்கு, கற்பக விருட்சம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிவுலா வருவர்.தினமும் இரவு மண்டகப்படிதாரர்கள் சார்பில் வைகை ஆற்றுக்குள் கலை நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் தொடக்கமாக நேற்று காலை கொடியேற்றத்தை முன்னிட்டு சோமநாதர் சுவாமி மண்டபத்திற்கு முன் கொடிமரத்திற்கு அருகில் அம்மனும்,சுவாமி பிரியாவிடையுடனும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர்.
சிவாச்சாரியார்களால் கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடியேற்றத்திற்கு பின் தீபஆராதனை நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 17 ந் தேதி காலை 11:40 மணியிலிருந்து 11:55 மணி வரைக்கும்,பின்னர் கோயிலின் பின்புறம் திருக்கல்யாண விருந்தும்,தேரோட்டம் மறுநாள் 18 ந்தேதி காலை 9:00 மணிக்கு துவங்கி 10:00 மணி வரை நடைபெற உள்ளது.வரும் 20 ந் தேதி சந்தனக்காப்பு அலங்காரத்துடன் விழா நிறைவு பெறுகிறது.