பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
02:04
உடுமலை:உடுமலை, தளி ரோடு காமாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற் சவம் கோலாகலமாய் நடந்தது.உடுமலை, தளி ரோடு காமாட்சி அம்மன் கோவிலில், பங்குனி
மாதத்தையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நேற்றுமுன்தினம் (ஏப்., 9ல்) துவங்கியது. பக்தர்கள், திருமூர்த்திமலையிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர்.
திருக்கல்யாண உற்சவம், நேற்று (ஏப்., 10ல்) காலை, 8:00 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு தீர்த்த அபிஷேகத்துடன் ஆரம்பமானது. திருக்கல்யாண சீர்வரிசைப்பொருட்கள் தயார்படுத்தப்பட்டன. காமாட்சி அம்மன் ஊதா நிற பட்டுடுத்தி, பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
காமாட்சி அம்மனுக்கு கூரைச்சேலை சாற்றியும், ஏகாம்பரேஸ்வரர் பட்டு ஆடை உடுத்தியும் மணகோலத்தில் காட்சியளித்தனர். காலை, 11:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுடனும், பக்தர்கள் கோஷம் எழுப்ப, சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருமணக் கோலத்தில்
காட்சியளித்த காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் சுவாமிகளை பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.
பெண்களுக்கு, மாங்கல்ய பொருட்கள் வழங்கப்பட்டன. மாலை, 6:00 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, கோவில் வளாகத்தில் திரு
உலா நடந்தது. திருக்கல்யாண திருவிழாவையொட்டி பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.