காரியாபட்டி:காரியாபட்டி மாந்தோப்பில் அங்காளஈஸ்வரி அம்பிகா சமேத வாலகுருநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.முதல் நாள் அனுக்ஞை, யஜமானஸங்கல்பம், விக்னேஸ்வர பூஜை நடந்தது.
இதை தொடர்ந்து கலசங்கள் புறப்பாடு, ஆலய விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பரங்குன்றம் அர்ச்சகர் சிவஸ்ரீ ராஜாபட்டர் செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.