பதிவு செய்த நாள்
12
ஏப்
2019
02:04
கம்மாபுரம்:கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் சோழவிநாயகர், செல்லியம்மன், திரவுபதியம்மன் கோவில்களில், கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 9ம் தேதி காலை 10:30 மணிக்கு கணபதி ஹோமம், நவகிர சாந்தி, மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல்கால பூஜை நிகழ்ச்சிகள் நடந்தது.நேற்று முன்தினம் காலை 7:20 மணிக்கு கோபூஜை, சூரியபூஜை, இரண்டாம் கால பூஜை, தீபாரதனை, நாடிசந்தானம், யாத்ராதானம், கடம்புறப்பாடு நடந்தது. காலை 9:30 மணியளவில் சோழவிநாயகர், செல்லியம்மன், திரவுபதியம்மன் கோவில்களிலுள்ள விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.