தேவகோட்டை:தேவகோட்டை அருகே நல்லாங்குடியில் வேம்புடைய அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது.தேவகோட்டையிலிருந்து பக்தர்கள் நல்லாங்குடி கோவிலுக்கு புரவி எடுத்து சென்று நேர்த்திகடன் செலுத்தினர்.
வேம்புடைய அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. நல்லாங்குடி மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் சுவாமியை வழிபட்டு சென்றனர். புரவி எடுப்பு விழாவை தொடர்ந்து மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.