திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் உள்ள ராமச்சந்திர பெருமாள் கோவிலில், ராமநவமி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவண்ணாமலை, சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் உள்ள ராமச்சந்திர பெருமாள் கோவிலில், ராமநவமி பிரம்மோற்சவ விழாவையொட்டி கிளிகோபுரம் அருகே உள்ள கொடிமரத்தில் குருக்கள் கொடியேற்றினர். விழாவையொட்டி, ராமச்சந்திர பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எருந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.