பதிவு செய்த நாள்
13
ஏப்
2019
12:04
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அடுத்த, நெடுங்குணம் ராமச்சந்திர பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில், பழமை வாய்ந்த சீதா லஷ்மண ஹனுமன் சமேத ராமச்சந்திர பெருமாள் கோவிலில், ராமநவமி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடத்தப்பட்டு, கிளிகோபுரம் அருகே உள்ள கொடிமரத்தின் அருகே ராமச்சந்திர பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எருந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து வேத மந்திரம் முழங்க, பிரம்மோற்சவ கொடியேற்றம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை, இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று சிம்ம வாகனம், 14ல், அனுமன் வாகனம் 15ல், சஷே வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. 16ல், கருடசேவை மற்றும் திருக்கல்யாணம் நடக்கிறது. 19ல், தேரோட்டம், 20ல், தீர்த்தவாரி, 21ல், ஊஞ்சல் சேவை நடக்கிறது.