பதிவு செய்த நாள்
13
ஏப்
2019
02:04
சேலம்: கருப்பூர் இஸ்கான் கோவில் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: பகவான் ராமரின் அவதார தினம், உலகம் முழுவதும் உள்ள இஸ்கான் கோவில்களில் கொண்டாடப்பட உள்ளது.
அதன்படி, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், இஸ்கான் சார்பில், சேலம், கருப்பூரிலுள்ள கோவிலில், நாளை, (ஏப்., 14ல்) கொண்டாடப்படும். மாலை, 6:30 மணிக்கு பஜனை, 7:00 மணிக்கு அபிஷேகம், 7:30 மணிக்கு, ராமலீலா எனும் தலைப்பில் உபன்யாசம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கும். இறுதியில், அனைவருக்கும் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள், திரளாக கலந்து கொண்டு, பகவானின் திருநாமத்தைஉச்சரித்து, ஆனந்தத்தை அடைந்து, ராமரின் கருணையை பெற்றுச்செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.