திருவண்ணாமலை: செய்யாறு, விஜய கோதண்டராமர் கோவிலில் 101வது வருட ஸ்ரீராமநவமி விழாவில், நடந்த சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மருத்துவமனை அருகே உள்ள ஸ்ரீவிஜய கோதண்டராமர் கோவிலில் 101வது வருட ராமநவமி விழாவில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ராமர் திருகல்யாண வைபவ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.