ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ராமநவமி உற்ஸவம் சிறப்புடன் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 10:35 மணிக்கு ராமர், சீதை, லட்சுமணனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜைகள் நடந்தது.
அங்கிருந்து புறபட்ட ராமர், சீதை, லட்சுமணன் உற்ஸவர்கள் மாடவீதி சுற்றி, திருவேங்கடமுடையான் சன்னிதியில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு அபிேஷகம் அலங்காரம் மற்றும் பிரபந்தகோஷ்டி நடந்தது. மாலை 6:00 மணிக்கு மீண்டும் ரதவீதி, மாடவீதி சுற்றி ஆண்டாள் கோயிலுக்கு வந்தடைந்தனர். வழிநெடுக பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதன்பின் வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் கோடை வசந்த உற்ஸவம் நடந்தது. தமிழ்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று (ஏப்.14) மாலை 6:00 மணிக்கு ஆண்டாள்கோயில் கஜலட்சுமி சன்னிதியில் 108 திருவிளக்கு பூஜை நடக்கிறது.