Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... பிள்ளையார்பட்டியில் புத்தாண்டு தீர்த்தவாரி பிள்ளையார்பட்டியில் புத்தாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறுபத்து மூவர் திருவிழா அவிநாசியில் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அறுபத்து மூவர் திருவிழா அவிநாசியில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
12:04

 அவிநாசி:63 நாயன்மார்களுக்கு பஞ்சமூர்த்திகள் காட்சியளித்த, அறுபத்து மூவர் திருவிழா, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்றிரவு நடந்தது.அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா, கடந்த, 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியாக, 63 நாயன்மார்களுக்கு, பஞ்சமூர்த்திகள் காட்சியளிக்கும் வைபவம், நேற்றிரவு கோவில் வளாகத்தில் நடந்தது.

அதில், மூஞ்சூறு வாகனத்தில் விநாயக பெருமான், ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், காமதேனு வாகனத்தில் கருணாம்பிகை அம்மன், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர், மயில் வாகனத்தில் சுப்ரமணியர் ஆகிய பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர்.சிவனடியார்களும், பக்தர்களும், நமசிவாய வாழ்க என கோஷமிட்டாறு வழிபாடு செய்தனர்.


கரூர் பசுபதீஸ்வரர் கோவில் சிவனடியார்கள் மற்றும் திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தார், சிவகண பூத வாத்தியங்களை இசைக்க, வாணவேடிக்கையுடன் பஞ்சமூர்த்திகளும், நாயன்மார்களும், நான்கு ரத வீதிகளில் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.விழாவையொட்டி, பஞ்சமூர்த்திகள் - 63 நாயன்மார்கள் வழிபாட்டுக்குழு அறக்கட்டளை சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சேக்கிழார் புனிதர் பேரவை நிறுவனர் முத்து நடராஜன் துவக்கி வைத்தார். நேற்று தமிழ்ப்புத்தாண்டு தினம் என்பதால், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அறுபத்து மூவர் விழாவில், பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar