விழுப்புரம்:விழுப்புரம், விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, 5,000 லிட்டர் பால் அபிஷேகம் நேற்று நடந்தது.
விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் குளக்கரையில், 90 அடி உயர, ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை அமைந்துள்ளது. இங்கு, தமிழ் புத்தாண்டான நேற்று காலை, 13ம் ஆண்டு பால் அபிஷேக உற்சவம் நடந்தது.விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 5,000 லிட்டர் பால் அபிஷேகத்தை, அரசமங்கலம் வெங்கடஷே்பாபு சுவாமிகள் துவக்கி வைத்தார். விழாவில் சிலையின் நிறுவனரும், முன்னாள் கவுன்சிலருமான தனுசு, திருவள்ளுவர் வீதி ஆஞ்சநேயர் கோவில் பரம்பரை அறங்காவலர் குமார், பாலமணிகண்டன், ராஜாமணி, ஜெயராமன், பத்மநாபன், வெங்கடேஸ்வரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.