பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
01:04
தேனி: மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் நேற்று தமிழ்புத்தாண்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விகாரி எனும் தமிழ்ப்புத்தாண்டு நேற்று பிறந்தது. இதனையொட்டி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், கணேச கந்த பெருமாள் கோயில், தேனி- பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயில், வேதபுரி தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
* பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில், தமிழ்புத்தாண்டையொட்டி மூலவர்களான வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி தாயார் அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* பாலசுப்பிரமணியர் கோயில், மீனாட்சியம்மன் கோயில், கைலாசபட்டி கைலா சநாதர் கோயில், கம்பம்ரோடு காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. * தீர்த்ததொட்டி மண்டபத்தில் உற்சவர் பாலசுப்பிரமணியன்,வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்தார். பாம்பாற்று பக்த ஆஞ்சநேயர்கோயில் மூலவர் ஆஞ்சநேயர் வடைமாலை அலங்காரத்தில் காட்சியளித்தார்.
* ஷீரடி சாய்பாபா கோயிலில், சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பிரசாதம் வழங்கப்பட்டது.
* தெற்கு அக்ரஹாரம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், அகண்ட நாமகீர்த்தனம், விசஷே திருமஞ்சனம், கிருஷ்ணர், ராதைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
* பெரியகுளம் சவுடேஸ்வரி கோயிலுக்கு, தீர்த்ததொட்டியிலிருந்து நீர் கொண்டு செல்லப்பட்டு தீர்த்வாரி உற்சவம் நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.
* லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப்பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
*பெரியகுளம் தேவாங்கர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சவுடேஸ்வரிஅம்மன் கோயிலுக்கு, தமிழ்புத்தாண்டை முன்னிட்டு பாலசுப்பிரமணியர் கோயிலில் இருந்து நகர்வலமாக தீர்த்த காவடி சென்றது. தலைவர் தங்கமணி, துணை தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
போடி: தீர்த்ததொட்டி ஆறுமுகநாயனார் கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. வற்றாத மூலிகை கலந்த தீர்த்த சுனையில் ஏராளமான பக்தர்கள் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. \தக்கார் பாலகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்தார்.
* போடி- தேனி மெயின் ரோட்டில் உள்ள சித்திரபுத்திரனார் கோயில், போடி பரமசிவன் கோயில், சுப்பிரமணிய கோயில், சீனிவாசப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலத்தெரு சவுடம்மன் கோயிலில் தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கொட்டகுடி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து, காவடி, கத்தி போடும் நிகழ்ச்சிகள் நடந்தன. தீர்த்தங்களை கொண்டு சவுடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் தரிசித்னர். பழைய பஸ்ஸ்டாண்ட் கொண்டரங்கி மல்லையசாமி கோயில், ஆர்.ஐ., ஆபீஸ் ரோட்டில் உள்ள காமாட்சியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கூடலுார்:தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. சுந்தரவேலவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அபிஷேகம், ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுருளிமலை பழநிமலை பாதயாத்திரை பெண்கள் குழுவினர் தெய்வீகப் பாடல்களை பாடினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* கூடலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சித்தி விநாயகர் கோயில், கன்னிகாளிபுரத்தில் செல்வ விநாயகர் கோயில், சீலைய சிவன் கோயில், வீருசிக்கம்மாள் கோயில், வீருகண்ணம்மாள் கோயில், அங்காளபரமேஸ்வரியம்மன் கோயில்களில் அதிகாலையில் பெண்கள் பொங்கல் வைத்தனர். சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.
கம்பம்: சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில், நரசிங்கபெருமாள் கோயில், கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில், வேலப்பர் கோயில், கவுமாரியம்மன் கோயில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் சுருளி அருவியில் குளித்து, அங்குள்ள சுருளிவேலப்பர், பூதநாராயணர், மற்றும் சிவன்கோயில்களில் சிறப்பு பூஜையில் பங்கேற்பது வழக்கம். தண் ணீர் இல்லாமல் அருவி வறண்டதால் பொதுமக்கள் கீழே உள்ள தொட்டியில் குளித்தனர். ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக பலர்கூறினர். ஆதி அண்ணாமலையார் கோயிலில் சிவனடியார் முருகன் சுவாமிகள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.