பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
04:04
தர்மபுரி: இலக்கியம்பட்டியில் உள்ள முனியப்பன் கோவிலில், கண் திறப்பு மற்றும் முப்பூஜை விழாவை முன்னிட்டு, நேற்று (ஏப்., 14ல்) கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி நேற்று (ஏப்., 14ல்)காலை, 10:00 மணிக்கு, கொடியேற்றம் மற்றும் கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, கங்கணம் கட்டிக் கொண்டனர். இன்று (ஏப்., 15ல்) காலை, 10:30 மணிக்கு, நூலஹள்ளி திரவுபதியம்மன் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்யப் படுகிறது. இரவு, 10:00 மணிக்கு, தெருக்கூத்து கலை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஏப்., 16ல்) காலை, 11:00 மணிக்கு, கரகம் அழைப்பு, பகல், 12:00 மணிக்கு முப்பூஜையும் நடக்கிறது. நாளை மறுநாள் (ஏப்., 17ல்) காலை, 9:00 மணிக்கு, முனியப்ப சுவாமிக்கு கண் திறப்பு விழா நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.