பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
03:04
வீரபாண்டி: சித்திரை திருவிழாவையொட்டி, கரபுரநாதர் கோவில் தேர் சுத்தம் செய்து சாரம் கட்டும் பணி நடந்தது. சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று தேரோட்டம் நடத்தப்படும். அதையொட்டி, கடந்த, 4ல், முகூர்த்த கம்பம் நடப்பட்டது.
வரும், 19ல், தேரோட்டம் நடக்கவுள்ளதால், இரு நாட்களாக, மரத்தேரை சுத்தப்படுத்தி, வார்னிஷ் அடித்து, சாரம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். நாளை (ஏப்., 16ல்), வாஸ்து பூஜை, 17ல் கொடியேற்றம், 18ல் திருக்கல்யாண உற்சவம் முடிந்து, சித்திரை திருவிழா தேரோட்டம், 19 மாலை, 4:00 மணிக்கு நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை, கோவில் அலுவலர்கள், சிவாச்சாரியர்கள், உற்சவ கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.