சபரிமலை: கேரளாவில் விஷூ புத்தாண்டை முன்னிட்டு, நேற்று சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கேரளாவில் நேற்று சித்திரை ஒன்று என்பதால், சபரிமலை, குருவாயூர் கோயில்களில் விஷூ கனி தரிசனம் நடைபெற்றது. இதற்காக, சபரிமலை நடை கடந்த 11-ம் தேதி மாலை திறக்கப்பட்டு, 12-ம் தேதி முதல் நெய் அபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகளுடன் படிபூஜையும் நடைபெற்றது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு விஷூ கனி தரிசனத்திற்கு பின், தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு நாணயங்களை தானமாக வழங்கினர். ஏராளமான பக்தர்கள் இதை பெற்று ஐயப்பனை தரிசித்து சென்றனர். ஏப்.19- இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும்.