தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2019 11:04
தஞ்சாவூர்: உலகபுகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று காலை நான்கு ராஜவீதிகளில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடந்தது. தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை,மாலைகளில் சுவாமிகள் பல்வேறு வாகன வீதி உலா நடந்தது. ஏறத்தாழ நுாற்றுண்டுகளுக்கு பிறகு புதிய தேர் செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 2015 ம் கோவில் தேரோட்டம் நடந்து வருகிறது. இந்தாண்டு நான்காவது ஆண்டாக நடந்தது. பதினாறை அடி உயரம் கொண்ட தேரில் சுமார் 25 அடி உயரத்துக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.
தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு ஸ்ரீ தியாகராஜர்,ஸ்கந்தர்,ஸ்ரீ கமாலம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடந்தது. காலை 5 மணிக்கு தேர் நிலையில் தியாகராஜர்,கமலாம்பாள் தேரில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து இன்று காலை 6.00 மணிக்கு அலங்கரித்து தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழந்தனர். அதனைதொடர்ந்து 4 ராஜவீதிகளிலும் தேர் வலம் வர தொடங்கியது. 4 ராஜ வீதிகல் வழியாக சென்ற தேர் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டது. விழாவில் திருவையாறு அய்யாரப்பர் கோவில் யானை கலந்து கொண்டது. தேர் செல்லும் வழியில் பெண்கள் கோலாட்டம் ஆடியும், முலைப்பாரியும் எடுத்து சென்றனர். தோரோட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்திற்கும் மேற்-பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தேரை காண பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.