சதுர்த்தி நாளில் விரதமிருப்பவர்கள் மாலை சந்திர தரிசனம் செய்த பின் தான் உணவு உண்ண வேண்டும் என்று கூறுகின்றனர். உண்மை தானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2012 04:03
எந்த ஒரு விரதம் இருந்தாலும் எதற்காக இருக்கிறோம் என்று ஒரு குறிக்கோள் இருப்பது வழக்கம். பிரதோஷ விரதம் என்றால் மாலை 4.30 மணி முதல் ஆறு மணி வரை விரதம் இருந்து பிறகு சாப்பிட வேண்டும். இதுபோன்று சதுர்த்தி விரதத்திலும் சந்திர தரிசனம் என்பது குறிக்கோள். எனவே இதை செய்த பிறகு சாப்பிடுவதே சரியானது.