Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் முருகன் ... திருப்பரங்குன்றம் திருமுருகனுக்கே; எங்கும் அரோகரா கோஷம்.. திருப்பரங்குன்றம் திருமுருகனுக்கே; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் நவக்கிரஹ கோவில் கும்பாபிஷேகம்; குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் நவக்கிரஹ கோவில் கும்பாபிஷேகம்; குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2025
06:07

சபரிமலை; சபரிமலையில், மாளிகை புறத்தம்மன் கோவில் அருகே நவக்கிரஹ கோவில் புனர்ப்பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.


கேரள மாநிலம், சபரிமலை, மாளிகை புறத்தம்மன் கோவிலின் இடதுபுற மேற்பகுதியில், நவக்கிரஹ மண்டபம் அமைந்திருந்தது. ‘இந்த மண்டபத்தை அப்புறப்படுத்தி, வசதியான மற்றொரு இடத்தில் கோவில் கட்ட வேண்டும்’ என தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது. இதையடுத்து, மாளிகை புறத்தம்மன் கோவிலின் இடதுபுறம் புதிய கோவில் கட்டப்பட்டு, நேற்று காலை 10:50 மணிக்கு கும்பாபிஷேக பூஜை துவங்கியது. நவக்கிரஹ சிலைகளை பூஜாரிகள் சுமந்து, மாளிகை புறத்தம்மன் கோவிலை வலம் வந்த பின், நவக்கிரஹ கோவிலில் வைக்கப்பட்டன. அங்கு, தந்திரி கண்டரரு ராஜீவரரு சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட கலசங்களை பூஜாரிகள் எடுத்து, கோபுரத்தின் மேற்பகுதிக்கு கொண்டு செல்ல, அந்த புனித நீரை, தந்திரி, கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி தீபாராதனை நடத்தினார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நவக்கிரஹ பிரதிஷ்டை முடிந்து, நேற்றிரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. ஆடி மாத பூஜைகளுக்காக, வரும் 16ம் தேதி மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான ... மேலும்
 
temple news
நெய்வேலி; சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடலுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar