கம்மாபுரம்:ஊ.கொளப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில், நாளை (26ம் தேதி) தீமிதி உற்சவம் நடக்கிறது.சித்திரை திருவிழாயொட்டி, கடந்த 17ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும், காலை மாலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு திரவுபதியம் மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார்.மகாபாரதம் கதைப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வாக நாளை (26ம் தேதி) காலை 7:00 மணிக்கு அரவாண் களபலி நிகழ்ச்சி, மாலை 4:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது.