பதிவு செய்த நாள்
27
ஏப்
2019
01:04
நெய்வேலி: நெய்வேலி தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில், சிங்கப்பூர் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதற்காக, சிறப்பு பூஜைகள் நடத்தி காணிக்கை செலுத்தினர்.
நெய்வேலி நகரம் வட்டம் 8ல் உள்ள ஜவகர்லால் நேரு சாலையில் விமான நிலையம் அருகே அமைந்துள்ள, தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் நேற்று (ஏப்., 26ல்) நவா வர்ணா சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும், பால், தயிர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.
நெய்வேலியில் வசித்த பலரும் தற்போது கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர்,மலேஷியா போன்ற வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இதில் சிங்கப்பூரில் வசிக்கும் பக்தர்கள் அவர்களது வேண்டுதல் நிறைவேறியதற்காக, நேற்று (ஏப்., 26ல்), தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் நடந்த பூஜைகளில் கலந்து கொண்டு, காணிக்கை செலுத்தினர்.