நெல்லிக்குப்பம் நடனபாதேஸ்வரர் கோவிலில் சுவாமி மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2019 01:04
நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில், சூரியஒளி சுவாமி மீது விழுந்ததை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ் வரத்தில், புகழ்பெற்ற ஹஸ்ததாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தொடர்ந்து ஒரு வாரம் காலை 6 மணிக்கு, சூரிய கதிர்கள் நேரடியாக சுவாமி மீது விழும். இந்த ஆண்டில், முதல் நாளாக நேற்று 26ல், காலை 5.50 மணிக்கு சூரிய கதிர்கள் நேரடியாக சுவாமி மீது விழுந்தது. பத்து நிமிடம் நீடித்த இந்த அதிசய நிகழ்வை, திரளான பக்தர்கள் பக்தியுடன் வழிபட்டனர். அடுத்த 6 நாட்களுக்கு காலையில் சூரிய கதிர்கள் சுவாமி மீது விழும் என சேனாபதி குருக்கள் தெரிவித்தார்.