உடுமலை: உடுமலை அருகே மலையாண்டிகவுண்டனூரில், பழமை வாய்ந்த மலைநாட்டு மாரியம்மன் கோயில் உள்ளது. கோயிலில், நீண்ட இடைவெளிக்கு பிறகு சித்திரை திருவிழா நோன்பு சாட்டப்பட்டது. சுற்றுப்பகுதி கிராம மக்கள் பங்கேற்று வருகின்றனர்.
மலையாண்டிகவுண்டனூர், கிளுவங்காட்டூர், கண்ணமநாயக்கனூர், பள்ளிவலசு கிராம பெண்கள், நேற்று (மே., 1ல்), அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வந்து, வழிபாடு நடத்தினர். மதியம், அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இன்று (மே., 2ல்) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.