ஆண்டிபட்டி: டி. அணைக்கரைப்பட்டியில் மாரியம்மன், காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் மார்ச் 13-ல் நடந் தது.
இதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது.தினமும் மூலவர் விநாயகர், மாரியம்மன், காளியம்மன், பைரவர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.மண்டல பூஜை நிறைவு விழாவில் பொதுமக்கள் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தினர்.ஏற்பாடுகளை ஊர்முதன்மை செஞ்சூரிசெல்வம், நாட்டாமை அழகுதுரை , பொதுமக்கள் செய்தனர்.