சின்னாளபட்டி: தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி, நந்திக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், 30 வகை அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. திருவாசக பாராயணத்துடன், உற்சவர் பிரகார வலம் நடந்தது.
சித்தையன்கோட்டை காசிவிசுவநாதர் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்துசுவாமி கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.