பதிவு செய்த நாள்
03
மே
2019
02:05
மஞ்சூர்:மஞ்சக்கம்பை ஹெத்தையம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.
மஞ்சூர் அடுத்துள்ள மஞ்சக்கம்பையில், மானிஹாடா ஹெத்தையம்மன் சத்திய நாகராஜர் கோவில் உள்ளது.
நடப்பாண்டு, 47 வது பூ குண்டம் திருவிழாவையொட்டி, நேற்றுமுன்தினம் (மே., 1ல்), காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜை, 9:00 மணிக்கு அய்யப்பனுக்கு அபிஷேகம், ஹெத்தையம் மனுக்கு அபிஷேகப் பூஜை நடந்தது.10:00 மணிக்கு நாகராஜருக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து, மதியம், 2:30 மணிக்கு நடந்த பூ குண்டம் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பூ குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.
விழாவில் ஆன்மிக சொற்பொழிவுகள், படுகர் கலாசார நடனம், இன்னிசை கச்சேரி நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.