பதிவு செய்த நாள்
03
மே
2019
02:05
அந்தியூர்: சொக்கநாச்சியம்மன் கோவில் தீ மிதி விழாவில், ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அந்தியூர் அருகேயுள்ள, கூத்தம்பூண்டி, சொக்க
நாச்சியம்மன் கோவில் குண்டம் விழா, கடந்த மாதம், 17ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் பல்வேறு நிகழ்வுகள் நடந்தன.
முக்கிய நிகழ்வான, குண்டம் விழா நேற்று (மே., 2ல்) காலை நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள, 60 அடி குண்டத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என, ஏராளமானோர் குண்டம் இறங்கினர். ஆப்பக்கூடல், கவுந்தப்பாடி, அந்தியூர், ஓசைபட்டி, முனியப்பன்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள், திரளாக கலந்து கொண்டனர். மஞ்சள் நீராட்டுடன், நாளை (மே 4ல்) பண்டிகை நிறைவடைகிறது.