பதிவு செய்த நாள்
04
மே
2019
12:05
வால்பாறை : வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், சித்திரை மாத பிரதோஷ பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, சித்திரை மாதம் இரண்டாவது பிரதோஷ வழிபாடு நேற்று முன் தினம் நடந்தது.மாலை, 5:30 மணிக்கு சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், அரிசிமாவு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷகம்செய்யப்பட்டது. அதன் பின், மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ரிஷப வாகனத்தில் காசிவிஸ்வநாதர் தேவியருடன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.