சிவகாசி: சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் 3ம் நாள் விழாவில் பிரம்மாண்ட சுவாமி சிலைகள் ஊர்வலமாக வந்தது. இக் கோயில் சித்திரை பொங்கல் விழா கடந்த 30 ல் துவங்கியது. விழா துவங்கிய நாளிலிருந்து தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் சித்திரை விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் , வெள்ளி சிங்க வாகனம், காமதேனு வாகனம், கைலாச பார்வத வாகனம் , வேதாள வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாவிப்பார்.
அதன்படி நேற்று அம்மன் வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளியும், கைலாச பார்வத வாகனத்திலும் வீதி உலா வந்தார். மேலும் முக்கிய நிகழ்ச்சியாக பிரம்மாண்ட சுவாமி சிலைகள் ஊர்வலமாக வந்தது. சிவன், அசுரரை வதம் செய்தல் உள்ளிட்டவைகள் தத்ரூபமாக சிலைகளின் வடிவில் காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.