பதிவு செய்த நாள்
04
மே
2019
02:05
ஈரோடு: ஈரோடு, அக்ரஹார வீதி, பெருமாள் அய்யர் கோவிலில், ஆன்மிக சொற்பொழிவு, ஆண்டுதோறும் நடக்கிறது. நடப்பாண்டு வரும், 6ம் தேதி முதல், 14 வரை நடக்கிறது. திருச்சி ஆன்மிக சிந்தனையாளர் கல்யாணராமன் பேசுகிறார். 6ல் கஜேந்திர மோட்சம், 7ல் பிரகலாத சரித்திரம், 8ல் வாமன அவதாரம், 9ல் திரவுபதி மானம் காத்தல், 10ல் நள சரித்திரம், 11ல் குசேலனும் கண்ணனும், 13ல் குந்தியும், கர்ணனும், 14ல் கர்ணன் மோட்சம் தலைப்புகளில், மாலை, 6:30 மணிக்கு தொடங்கி, இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.