தொண்டாமுத்துார் : தொண்டாமுத்துார் மாரியம்மன் கோவில், 300 ஆண்டு பழமையானது. ஆண்டுதோறும், சித்திரை மாதம் விளக்கு பூஜை நடைபெறும். இந்தாண்டு, மழை வேண்டி, விளக்கு பூஜை நடந்தது. மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, 108 பெண்கள், பூஜையில் விளக்கு ஏற்றி, அம்மனை வழிபட்டனர். இரவு, 8:00 மணிக்கு கன்னி பூஜை, மகா தீபாராதனை, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.