சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில் கிருத்திகை தினத்தை முன்னிட்டு, முருகனுக்கு பால், பழம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. பின்னர் வள்ளி, தெய்வானை சமேததரராய் முருகன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, திருப்புகழ் என்ற தலைப்பில் மகேஷ் என்பவரின் சொற்பொழிவு நடைபெற்றது.