கொடைக்கானல்: கொடைக்கானலில் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் மற்றும் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில்களில் மழை வேண்டி விளக்குப் பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். விழாவில் குறிஞ்சி மலை குமரனுக்கு சிறப்பு ஆராதனை மற்றும் பூஜைகள் நடந்தது.முன்னதாக அன்னதானம் நடந்தது.