பதிவு செய்த நாள்
06
மே
2019
02:05
தொண்டாமுத்தூர் : வெள்ளியங்கிரி மலையில், சித்திரை மாத அமாவாசையை ஒட்டி, 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர்.கோவையில் உள்ள மிக முக்கிய ஆன்மிக தலங்களில் ஒன்று, தென்கயிலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி மலை. மேற்கு தொடர்ச்சி மலையில், 7 மலைகளுக்கு மேல், கிரிமலையில் சுயம்புவாய் அருள்பாலிக்கும் சிவபெருமானை தரிசிக்க, கடந்த பிப்., முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன் தினம் (மே., 4ல்), சித்திரை மாத அமாவாசை மற்றும் விடுமுறை தினம் என்பதால், மாலை முதலே, பக்தர்களின் வருகை அதிகரித்தது. இரவு மலை ஏறியவர்கள், சாமி தரிசனம் செய்து விட்டு, நேற்று (மே., 5ல்)கீழே இறங்கினர். பக்தர்களின் வருகையையொட்டி கோவில் நிர்வாகம், வனத்துறை, போக்குவரத்து துறை, போலீசார் சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.