பதிவு செய்த நாள்
06
மே
2019
02:05
பெ.நா.பாளையம் : வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண ஜபம் மற்றும் ஹோமம்ஆகியன நடந்தன.கோவை மண்டலத்திலுள்ள, 35 பிரபல கோவில் களில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. இதற்காக இந்து சமய அறநிலைத் துறையினர் ஏற்பாடு செய்து உள்ளனர்.
இதில், ஓதுவார்களை கொண்டு, சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய மழை வேண்டுதல் பதிகம் ஓதியும், திருஞானசம்பந்தர் இயற்றிய தேவார மழைப்பதிகத்தை பாடியும், வருண ஜபம் செய்தும், சிறப்பு யாகம் நடத்தும்படி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டார்.
அதன்படி, கோவை மண்டலத்தில் உள்ள திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் உள்ள கோவில்களில் யாகம் நடந்து வருகின்றன.நேற்று முன்தினம் (மே., 4ல்), துடியலூர் அருகே வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோவிலில் வருண ஜபம் நடந்தது. நிகழ்ச்சியை யொட்டி காலை, 11.00 மணிக்கு சிறப்பு யாகம், மழை வேண்டிய பதிகம் ஓதுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், கோவில் செயல் அலுவலர் மருதுபாண்டி, திருக்கோவில் திருப்பணி குழுவினர் மணி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.