கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2019 02:05
கோவில்பாளையம் : காலகாலேஸ்வரர் கோவிலில் இன்று (மே., 6ல்)மழை வேண்டி யாகம் நடக்கிறது.
தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கடும் வெயில் அடிக்கிறது. இதுவரை போதுமான மழையும் பெய்யவில்லை.
நிலத்தடி நீர் மட்டம் 1,200 அடிக்கு கீழ் சென்று விட்டது. குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்து சமய அற நிலையத்துறை சார்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
கோவில்பாளையத்தில் பல நூறு ஆண்டுகள் பழமையான காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவில் பாடல் பெற்ற தலமாகும்.இங்கு இன்று காலை 9:00 மணிக்கு மழை வேண்டி யாகம் நடக்கிறது. அப்பர் இயற்றிய மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும் என்று துவங்கும் பாடலோடு மழைக்கான யாகம் துவங்குகிறது. தொடர்ந்து ஒவ்வொரு பதிகங்களாக பாடப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகளும், உபயதாரர்களும் செய்து வருகின்றனர்.