திருச்செங்கோட்டில், அம்மன் தேரோட்ட விழா: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2019 03:05
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், அழகுநாச்சி அம்மன் திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேர்திருவிழா வரும், 10ல் கொடியேற் றத்துடன் துவங்க உள்ளது. முதல் நிகழ்வாக, காவல் தெய்வங்களுக்கு வழிபாடு செய்து அமாவாசையை திதியில், பத்ரகாளியம்மன் என்ற அழகுநாச்சி அம்மன் திருத்தேரோட்டம் நடந்தது.
அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் கருணாநிதி வடம்பிடித்து துவக்கி வைத்தார். அமாவாசை தின இரவில், அம்மன் தேரோட்டம் நடக்கும். இதனால் தேரோட்டத்தை இருட்டுத்தேர் என பொதுமக்கள் அழைப்பர். சிறுவர்கள் மற்றும் பெண்கள் இந்த தேரை வடம் பிடித்து இழுத்து வருவர். கடந்த சில ஆண்டுகளாக அரசு உத்தர வால், இருளில் இழுக்கப்பட்ட அம்மன் தேர் தற்போது மாலையில் இழுக்கப்பட்டு வருகிறது.