பதிவு செய்த நாள்
06
மே
2019
03:05
தர்மபுரி: தர்மபுரி அருகே, கிருஷ்ணாபுரத்தில் ஸ்ரீசெங்காளி யம்மன் கோவிலில், அமாவாசை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவத் திருவிழா நேற்று முன்தினம் (மே., 4ல்) நடந்தது.
விழாவை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை வழிபாடு, பகல், 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, பிற்பகல், 3:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், செங்காளியம்மன் காயத்ரி ஹோமம், மாலை, 5:00 மணிக்கு கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபராதனை ஆகியவை நடந்தன.
மாலை, 6:00 மணிக்கு, 1008 திருவிளக்கு பூஜை, 6:30 மணிக்கு செங்காளியம்மன் திருக்கோவில் உலா, இரவு, 7:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், அன்னதானமும் நடந்தது. விழாவில், கிருஷ்ணாபுரம், தர்மபுரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.