ஸ்ரீவில்லிபுத்துார்: கோடை மழை பெய்யவேண்டி ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் சிறப்புயாக பூஜை மற்றும் புஷ்பாஞ்சலி யாகம் நடந்தது.
இதைமுன்னிட்டு நேற்று மாலை 6:00 மணிக்கு சுக்கிரவார் மண்டபத்தில் கோயில் பட்டர்கள் ரகு, பாலாஜி மற்றும் ரமஷே் பட்டர்கள் தலைமையில் வர்ணபூஜை, ருத்ர ஹேமபூஜை, 11 வகை அபிஷேகங்கள் நடந்தது. சிவனுக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி யாகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை தக்கார் இளங்கோவன், செயல்அலுவலர் ஜவகர் செய்திருந்தனர்.