திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் மழை வேண்டி நவக்கலச அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2019 01:05
திருப்புத்தூர்:திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் மழை வேண்டியும், உலக நன்மை வேண்டியும் யோகநரசிம்மருக்கு நவகலச திருமஞ்சனம் நடந்தது.
அண்மையில் திருக்கோயில்களில் வருண பகவானை வேண்டி பூஜைகள் நடத்த இந்து அறநிலையத்துறையினர் அறிவித்திருந்தனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட் பட்ட இக்கோயிலில் நேற்று (மே., 8ல்) மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று (மே., 8ல்) காலை 9:30 மணிக்கு சிம்ம மண்டபத்தில் 9 கலசங்கள் அடங்கிய திருமஞ்சன பூஜை துவங்கியது.
பட்டாச்சார்யர்கள் ஒன்றரை மணி நேரம் பூஜை செய்தனர். பின்னர் புனித நீர் நிரம்பிய கலசங்கள் பட்டாச்சார்யார்களால் யோகநரசிம்மர் சன்னதிக்கு கொண்டு செல்லப் பட்டது.அங்கு யோகநிலையில் உள்ள நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
இக்கோயிலில் மழை பொய்க்கும் காலங்களில் யோகநரசிம்மருக்கு திருமஞ்சனம், வேதபாராயணம்,வருண ஜெபம் செய்வது வழக்கம். நரசிம்மரை குளிர்வித்தால் வருண பகவான் மனமிறங்கி மழை பெய்யும் என்பது ஐதீகம். அதனடிப்படையில் யோகநரசிம் மனுக்கு நவக்கலச திருமஞ்சனம் நடந்தது.