ஸ்ரீவில்லிபுத்தூர் மழை வேண்டி ஆண்டாள் கோயிலில் யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2019 02:05
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மழைவேண்டி சிறப்பு யாகம் மற்றும் திருமஞ்சனம் நடந்தது.இதையொட்டில் கோயில் மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு முத்துபட்டர், ரகுராம பட்டர், தேவராஜ் பட்டர்கள் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் யாகத்தை நடத்தினர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சந்திரபிரபா எம்.எல்.ஏ., தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவலர் பாலசுப்பிரமணியன், மணியம் கோபி, கோயில் அலுவலர் இளங்கோவன் பங்கேற்றனர்.