தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி ஊரணிக்கு வருகிறது விமோசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2019 02:05
தேவகோட்டை:தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் பின்புறம் ஜடாயு தீர்த்தம் எனப்படும் ஊரணி உள்ளது.
ஏராளமானோர் பயன்படுத்தும் இந்த ஊரணி சில மாதங்களாக கோரை செடிகளாலும், குப்பைகளாலும்,பாசி, எண்ணெய் கழிவுகளாலும் மாசுபட்டு மிகவும் மோசமான நிலைக்கு சென்றது.ஒரு படித்துறையை தவிர மற்ற படிகளை பயன்படுத்த முடியாத அளவிற்கு காணப்படுகிறது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
சிவகங்கை சமஸ்தான ஒத்துழைப்போடு ஊரணியை சுத்தம் செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது. சிவாச்சாரியர்கள், கிராமத்தினர் சிலரின் ஏற்பாட்டின் படி நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் பல பகுதிகளிலிருந்து பல குழுக்களாக வந்து சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு மே25, 26ல் கண்டதேவி ஊரணியில் தூய்மை பணியில் ஈடுபட உள்ளனர். சமூக சேவையில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.