பதிவு செய்த நாள்
10
மே
2019
01:05
புதுச்சேரி: ராமானுஜரின் 1002ம் ஆண்டு திருநட்சத்திர வைபவம் நேற்று (மே., 9ல்) நடந்தது.
புதுச்சேரி, செயின்ட் தெரேஸ் வீதியில் அரங்க ராமானுஜர் பஜனை மடம் அமைந்துள்ளது. இங்கு, ராமானுஜரின் 1002ம் ஆண்டு சித்திரை திருவாதிரை திருநட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று (மே., 9ல்) காலை 8:30 மணிக்கு, ராமானுஜர் விக்ரகத்துக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பிரபந்த சேவையை தொடர்ந்து, ராமானுஜர் உள்புறப்பாடு நடந்தது. பின், சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதம் வினியோகிக்கப் பட்டது.
விழா ஏற்பாடுகளை, ராமானுஜர் மடத்தின் சிறப்பு அதிகாரி அன்புசெல்வன் செய்திருந்தார். பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் வாசு, தேவநாத ராமானுஜதாசர், பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.