ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயில் வைகாசி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2019 01:05
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இதை முன்னிட்டு நேற்று (மே., 9ல்) காலை 9:00 மணிக்கு கொடிபட்டமானது மாடவீதிகள் சுற்றி கோயிலுக்கு கொண்டுவர ரகு பட்டர் கொடிஏற்றி வைத்தியநாதர் சுவாமி, சிவகாமி அம்பாள், பிரியாவிடையம் பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தக்கார் இளங்கோவன், செயல்அலுவலர் ஜவகர் பங்கேற்றனர். இதையடுத்து தினமும் காலை 10:00 மணிக்கு பல்லக்கு சேவை, இரவு 7 :00 மணிக்கு வீதி உலா எழுந்தருளல் நடக்கிறது. மே 15 இரவு 7:15 மணிக்கு திருக்கல்யாணம், மே 17 காலை 8:15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தினமும் இரவு 7:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது.