மேலூர் வந்து தாசில்தாருக்கு முதல் மரியாதை தரும் சிவன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2019 01:05
மேலூர்:திருவாதவூர் திருமறை நாதர் கோயில் வைகாசி மாத மாங்கொட்டை திருவிழா நேற்று (மே.,9ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயிலை சுற்றி வந்த அருள் பாலித்தனர். அதை தொடர்ந்து கொடியேற்றப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக பஞ்சமூர்த்திகளுடன் திருமறை நாதர், வேதநாயகி அம்பாள் மே 13ல் மேலூரில் எழுந்தருளுகின்றனர். இது மாங்கொட்டை திருவிழாவாக கொண்டாடப்படும்.மே 16 திருக்கல்யாணம், மே 17 தேரோட்டம்,மே 18 ல் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
தேடி வரும் சிவன்ஆங்கிலேயர் காலத்தில் மேலூரில் இருந்து தினமும் 8 கி.மீ.,தூரம் திருவாதவூருக்கு நடந்து சிவனடியார் ஒருவர் சிவனை தரிசிப்பார். வயது முதிர்வால் தொடர்ந்து செல்ல முடியாததால் அவரது சீடரான தாசில்தார், மேலூரிலேயே சிவலிங்கத்தை அமைத்து கொடுத்தார்.இருந்தாலும் சிவனடியாருக்கு திருவாதவூர் செல்லாதது கவலையாக வே இருக்க, அவரது கனவில் தோன்றிய சிவன், நீ இருக்கும் இடத்திற்கு நானே வருவேன் என்றார்.
இதன்படியே ஆண்டுதோறும் சிவன் மேலூரில் எழுந்தருளுவதாக ஐதீகம். இதன்காரணமாக இன்றும் மே 10 பணியில் உள்ள தாசில்தாருக்கு கோயில் சார்பில் முதல் மரியாதை வழங்கப் படுகிறது.